ஜம்மு – காஷ்மீர் பஹல்கம் பகுதியில் பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்வர்களுக்கு யாழ்ப்பாணத்தில் நினைவேந்தல்!
Thursday, May 1st, 2025
இந்தியாவின் ஜம்மு – காஷ்மீர் பஹல்கம் பகுதியில் 22.04.2025 அன்று 26 பொதுமக்கள் பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்டிருந்தனர்.
இவர்களுக்கான அஞ்சலி நிகழ்வு ஒன்று யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் நேற்று புதன்கிழமை (30.04.2025) யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரகத்தால் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது
இதன்போது கொல்லப்பட்டவர்களுக்காக அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் கொல்லப்பட்டவர்களின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்க்பபட்டது.
இந்த அஞ்சலி நிகழ்வில் இந்தியத் துணைத் தூதுவர் சாய்முரளி, வடக்கு மாகாண பிரதம செயலாளர் இ.இளங்கோவன், மதத் தலைவர்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் பங்கேற்றனர்.
000
Related posts:
சதொச நிறுவனத்திற்கோ அதன் ஊழியர்களுக்கோ எந்த தொடர்பும் கிடையாது - அமைச்சர் ரிசாத்
தேர்தல் ஆணைக்குழுவின் விசேட கோரிக்கை!
இந்திய வெளிவிவகார அமைச்சர் மற்றும் பங்களாதேஷ் பிரதமருடன் ஜனாதிபதி ரணில் விசேட சந்திப்பு!
|
|
|


