ஜனநாயக வழி போராட்டம் வன்முறை வழி நோக்கி செல்லாதிருக்க அரசு அவதானம் செலுத்த வேண்டும்  – வலி வடக்கு மீழ் குடியேற்ற சங்க உறுப்பினர் அன்ரனி சுபாஸ் !

Wednesday, August 13th, 2025


……
வலி வடக்கு மக்களின் உணர்வுகளில் அரசும் அரச அதிகாரிகளும் அக்கறை கொண்டு அவர்கள் முன்னெடுத்துவரும் ஜனநாயக வழி போராட்டம் வன்முறை வழி நோக்கி செல்லாதிருக்க அரசு அவதானம் செலுத்த வேண்டும் என வலி வடக்கு மீழ் குடியேற்ற சங்க உறுப்பினர் அன்ரனி சுபாஸ் வலியுறுத்து.

காணிகளை இழந்த வலி வடக்கு உரிமையார்கள் யாழ்பாடி தனியார் விடுதியில் ஊடக சந்திபொன்றை மேற்கொண்டநர்.

இதன்போது காணிகளை இழந்த வலி வடக்கு உரிமையார்களால் கடந்த சில நாட்ளுக்கு முன்னர் கொமும்பில் உள்ள  வெளிநாட்டு தூதரகங்களிலும்,UN காரியாலயம் மற்றும் மனித உரிமை தலைமை காரியாலயம் ஆகியவற்றில், வலிவடக்கு காணி விடுவிப்பு தொடர்பில் மேற்கொண்ட பரிந்துரை செயற்பாடுகள் தொடர்பாக தெளிவூட்டுகையில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் –

நாம் எமது பூர்வீக நிலங்களையே மீளப்பெறும் நோக்குடன் கடந்த 35 வருடங்களுக்கு மேலாக போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம்.

ஆனால் அரசுகள் மாறினாலும் அரச பொறிமுறையிலோ அரச அதிகாரிகளின் மனோ நிலையிலோ மாற்றங்கள் ஏதும் இல்லாதுள்ளது.

நாம் எமது நிலத்துக்காம போராடிப் போராடி சந்ததிகளை கடந்துகொண்டிருக்கின்றோம். அதவிட ஏமாற்ப்பட்டுக்கொண்டிருக்கின்றோம் என்பதே உண்மை.

எமது ஜனநாயக வழி போராட்டத்தை தொடர்ந்தும் அரசு கண்டுகொள்ளாமல் இருக்குமானால் அது கடந்த காலங்கள் போன்று வன்முறை வழிமுறைக்கும் செல்லும் ஆபத்து இருக்கின்றது.

இந்த மாற்றங்கள் உருவாகாது தீர்வை கொடுக்கவேண்டியது அரசின் பொறுப்பாகும்.

நாம் தொடர்ந்தும் அகிம்சைவழியிலா அல்லது வன்முறை வழியிலா போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கவேண்டுதது இன்றைய அரசின் பொறிமுறையில்தான் உள்ளது என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிபிடத்தக்கது.
0000

Related posts: