சேவை என்ற போர்வையில் இரத்தத்தை உறுஞ்சும் யாழ் போதனா வைத்தியசாலை – சுகாதார தொண்டர்கள் குற்றச்சாட்டு!
Saturday, June 6th, 2026
……
சேவை என்ற போர்வையில் எமது இரத்ததை உறிஞ்சிக் குடித்த யாழ் போதனா வைத்தியசாலையின் மீயுயர் பீடம் நிர்வாகம், எமக்கான நியமனத்தை வழங்குவதற்கு பின்னடிப்பதுடன் தமது சுயநல உள்ளீர்ப்புகளை கொண்டுவந்து நிரந்தரமாக எம்மை துரத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது என்றும் நிரந்தர நியமன உள்ளீர்ப்பில் நிராகரிக்கப்பட்ட சுகாதார தொண்டர்கள் குற்றம் சாட்டினர்.
யாழ் போதனா வைத்தியசாலையில் 5 வருடங்களுக்கு மேலாக தொண்டர் அடிப்படையில் சேவைகளை முன்னெடுத்து நிரந்தர நியமனத்துக்கான நேர்முகத் தேர்வில் உள்வாங்கப்படாததால் அசௌகரியத்துக்குள்ளான 170 சுகாதார தொண்டர்கள் ஒன்றிணைந்து இன்று இரண்டாவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்பதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சுகாதார தொண்டர்கள், தமக்கு நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு விடுக்கப்பட வேண்டும் என கோரி நேற்றையதினம் போராட்டத்தை ஆரம்பித்த நிலையில் அது இன்றையதினமும் இடம்பெற்றது.
யாழ்ப்பாண வைத்தியசாலையின் சுகாதாரப் பணியாளர்கள் வெற்றிடத்திற்கான நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு 92 பேருக்கு விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஐந்து வருடங்களாக பணியாற்றம் தமக்கு முன்னுரிமை வழங்கப்பட்ட பின்னரே ஏனையோருக்கு வழங்கப்பட வேண்டும் என யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலை சுகாதாரத் தொண்டர்கள் குறித்த போராட்டத்தில் குதித்தனர்.
இதன்போது நேர்முகத் தேர்வுக்கு வந்தவர்களுக்கும் யாழ்ப்பாணம் போது நான் வைத்தியசாலையில் சுகாதார தொண்டர்களுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டது.
பின்னர் நேர்முகத் தேர்வுக்கு வந்த அதிகாரி ஒருவர், இன்றையதினம் பிரச்சனை நடப்பதால் வேறு ஒரு தினத்திற்கு நேர்முகத் தேர்வினை நடாத்தவுள்ளதாக தெரிவித்த நிலையில் நேர்முக தேர்வுக்கு வந்தவர்கள் அங்கிருந்து நகர்ந்து சென்றனர். இருப்பினும் சுகாதார தொண்டர்கள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
Related posts:
|
|
|


