Warning: session_start(): open(/opt/alt/php73/var/lib/php/session/sess_bf373a7fee47a3e64653574b172eadf7, O_RDWR) failed: Disk quota exceeded (122) in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/functions.php on line 1285

Warning: session_start(): Failed to read session data: files (path: /opt/alt/php73/var/lib/php/session) in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/functions.php on line 1285
சுற்றுலா கப்பலில் வைரஸ் தொற்று -  3 பேர் உயிரிழப்பு! - EPDP NEWS

சுற்றுலா கப்பலில் வைரஸ் தொற்று –  3 பேர் உயிரிழப்பு!

Wednesday, May 6th, 2026




அர்ஜென்டினாவிலிருந்து புறப்பட்ட ‘எம்.வி ஹோண்டியஸ்’ சொகுசு கப்பலில் ஹான்டாவைரஸ் பரவியதில் மூன்று பயணிகள் உயிரிழந்தனர்.


இதனால் கேப் வெர்டே அருகே நடுக்கடலில் நிறுத்தப்பட்டுள்ள இக்கப்பலில் உள்ள 150 பயணிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.


பொதுவாக எலிகள் மூலம் பரவும் இவ்வைரஸ், தற்போது மனிதர்களுக்குள்ளும் பரவக்கூடிய அரிதான ஒரு வகையாக உருமாறியுள்ளதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.


பாதிக்கப்பட்ட கப்பல் மருத்துவர் உட்பட மூவர் சிகிச்சைக்காக நெதர்லாந்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்.


உலக சுகாதார அமைப்பின் கோரிக்கையை ஏற்று, இக்கப்பலை கேனரி தீவுகளில் தரையிறக்க ஸ்பெயின் அனுமதி அளித்துள்ளது.


தற்போதைக்கு பொதுமக்களுக்குப் பெரிய அளவில் ஆபத்து இல்லை என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

Related posts: