சுகாதாரத்திற்கு தீங்கு  – நெல்லியடியில் பச்சைகுத்தும் நிலையத்திற்கு வைக்கப்பட்டது சீல்!

Thursday, January 30th, 2025

நெல்லியடியில் அமைந்துள்ள ஒரு வியாபார நிலையத்தின் செயற்பாடுகள் அனைத்தையும் தடை செய்வதாக வடமராட்சி பிரதேச சபையின் செயலாளர் கணேசன் கம்சநாதன் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது

நெல்லியடியில் அமைந்துள்ள ஒரு வியாபார நிலையத்தின் செயற்பாடுகள் அனைத்தையும் தடை செய்வதாக வடமராட்சி பிரதேச சபையின் செயலாளர் கணேசன் கம்சநாதன் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

சுகாதாரத்திற்கு தீங்கு ஏற்படுத்தும் வகையில் பச்சைகுத்தும் (TATTO) செயற்பாட்டில் ஈடுபட்டமை மற்றும் துஸ்பிரயோகங்கள் இடம்பெற்றமையினால் நபர் ஒருவர் உடல், உள ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

எனவே இவ் வியாபார நிலையம் இன்றிலிருந்து மறு அறிவித்தல்வரை மூடப்படுகின்றது. வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபையின் முன் அனுமதி இன்றி இக் கடையைத் திறத்தல், உள்நுழைதல், வியாபார செயற்பாடுகளில் ஈடுபடுதல் என்பன முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளது என்பதனை இத்தால் பகிரங்கமாக அறியத்தருகின்றேன்.

இவ் அறிவித்தலை மீறினால் 1987 ஆம் ஆண்டின் 15ம் இலக்க பிரதேசசபைகள் சட்டத்தின் பிரிவு 78,149 இற்கு அமைவாக பொருத்தமான நடவடிக்கை எடுக்கப்படும் என அறியத்தருகின்றேன் என செயலாளரால் குறிப்பிட்டுள்ளது.

00ஸ

Related posts:


உயிரிழப்புக்களால் வரும் நட்டத்தை ஈடு செய்ய குறிவைக்கப்படுவோர் சிறார்கள் தான் - மதுபானம் மற்றும் போதை...
உழைக்கும் மக்களின் பணத்தில் இயங்கும் அரச நிறுவனங்கள் பொது மக்களுக்கு சுமையாகி விடக் கூடாது – ஜனாதிபத...
13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு இன்று பாரதப் பிரதமருக்கு கடிதம் எழுதும் ...