சிறுவன் உட்பட நால்வர் ஹெரோயினுடன் யாழில் கைது!

Thursday, September 11th, 2025


…..
யாழ்ப்பாணத்தில் ஒரு சிறுவன் உட்பட நால்வர் ஹெரோயின் போதைப்பொருளுடன் இன்றையதினம் கைது செய்யப்பட்டனர்.

16, 18, 20 மற்றும் 22 வயதுடைய நால்வர் 170 மில்லிகிராம் ஹெரோயினுடன் இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாணம் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைகளின் பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்

00

Related posts:

அடுத்த இரு வாரங்கள் முக்கியமானவை : எச்சரிக்கையாக இருக்குமாறு பொதுமக்களிடம் பொதுச் சுகாதார பரிசோதகர் ...
கொரோனா நோயாளர்களுக்கு வீட்டிலேயே சிகிச்சையளிக்கும் முறைக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு - சுகாதார அ...
அனைவரும் இலங்கைக்கு ஆதரவளிக்க முன்வரவேண்டும் - சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஸ்ட அதிகாரி கோரிக்கை!