சிறுநீரக நோயாளிகளுக்கான முக்கிய சோதனை – அரச மருத்துவமனைகளில் தடங்கல்!

Wednesday, June 11th, 2025

கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று நோயாளிகளுக்கு அவசியமான டக்ரோலிமஸ் அளவு சோதனைகள், மற்றும் சோதனைக்குத் தேவையான இரசாயனங்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் காரணமாக, அரசு மருத்துவமனைகளில் குறித்த நோயாளிகளுக்கான சிகிச்சைகள் காலவரையின்றி தாமதமாகி வருவதாக அரச மருத்துவமனை ஆய்வக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு தேசிய மருத்துவமனையின் ஆய்வக அதிகாரிகளின் கூற்றுப்படி, இரசாயன பற்றாக்குறை காரணமாக கடந்த மூன்று மாதங்களாக இந்த சோதனை மேற்கொள்ளப்படவில்லை.

இந்தநிலையில், குறித்த இரசாயனங்கள் இல்லாததால் தனது அமைப்பும் நெருக்கடியை எதிர்கொள்கிறது என்பதை இலங்கை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் சுரங்கா தொலமுல்ல குறிப்பிட்டுள்ளார்.

டக்ரோலிமஸ் அளவு சோதனை என்பது ஒரு முக்கியமான சோதனையாகும், இது ஒரு மருத்துவர் பரிந்துரைத்தபடி, மாற்று அறுவை சிகிச்சைக்குப் பின்னர் நோயாளிகளுக்கு மாதந்தோறும் அல்லது ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் செய்யப்பட வேண்டும் .

சோதனை முடிவுகளின் அடிப்படையில்: டக்ரோலிமஸ் அளவுகள் நிலையான வரம்பிற்குக் கீழே இருந்தால், அதன் அளவை அதிகரிக்க வேண்டும்.

அளவுகள் மிக அதிகமாக இருந்தால், கடுமையான பக்க விளைவுகளைத் தவிர்க்க அளவைக் குறைக்க வேண்டும்.

இந்தநிலையில் டக்;ரோலிமஸ் அளவை சரியாகக் கண்காணித்து சரிசெய்யத் தவறினால், அது உயிருக்கு ஆபத்தானது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

தற்போது பெரும்பாலான அரச மருத்துவமனைகளில் இந்த சோதனை கிடைக்கவில்லை. தனியார் எனினும் தனியார் மருத்துவமனைகள் சுமார் 26,000 ரூபாய் செலவில் இந்த பரிசோதனையை வழங்குகின்றன.

இருப்பினும், இது அனைத்து சாதாரண மக்களுக்கும் தாங்கமுடியாத செலவாகும் என்று மருத்துவத்துறை சுட்டிக்காட்டியுள்ளது.

000

Related posts: