சாவகச்சேரி உதவிப் பிரதேச செயலர் மரணம் – சடலத்தை அடக்கம் செய்ய திடீர் மரண விசாரணை அதிகாரி உத்தரவு!

Monday, February 17th, 2025

தீயில் எரிந்த சாவகச்சேரி பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலர் இன்றையதினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நீர்வேலி தெற்கு பகுதியைச் சேர்ந்த சதீஸ் தமிழினி என்ற 34 வயதுடைய குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இவர் 6 மாதங்கள் கர்ப்பிணியாக உள்ளார். கடந்த 08.02.2025 அன்று தீயில் எரிந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அவரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டபோது, நுளம்பு திரியை பற்ற வைத்த பின்னர் தீக்குச்சியை தவறுதலாக அருகில் உள்ள மண்ணெண்ணெய் கொள்கலன் மீது போட்டதால் அதன்மூலம் ஏற்பட்ட தீ விபத்தில் தான் சிக்கியதாக வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

தொடர்ச்சியாக 9 தினங்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவர் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவரது சிசுவையேனும் உயிருடன் காப்பாற்றுவதற்கு வைத்தியர்கள் தீவிர சிகிச்சை மேற்கொண்டனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி சிசுவுடன் அவர் உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். சடலத்தை புதைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

000

Related posts:

விரைவில் மருந்து வகைகளின் விலைகளை குறைப்பதற்கு தீர்மானம் - இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன...
ஒக்டோபர் மாதம் வரை சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து நிதி கிடை வாய்ப்பில்லை - நட்பு நாடுகளிடமிருந்து...
சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் தேசபந்துவிற்கான அழைப்பாணையை செல்லுபடியற்றதாக்க மேன்முறையீட்டு நீதி...