சர்ச்சைக்குரிய தையிட்டி விகாரை   காணி நில விவகாரம் – 17 ஆம் திகதி நில அளவை செய்யப்படும் என  யாழ் மாவட்ட அரச அதிபர் தெரிவிப்பு!

Saturday, April 11th, 2026

சர்ச்சைக்குரிய தையிட்டி விகாரை சூழவுள்ள காணி நிலங்களை  எதிர்வரும் 17 ஆம் திகதி நில அளவை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரச அதிபர் தெரிவித்துள்ளார்.

இன்று யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்

தையிட்டி காணி தொடர்பாக, காணி உரிமையாளர்கள் மற்றும் கடற்றொழில் அமைச்சர் துறைசார் அதிகாரிகள் பிரசன்னத்துடன் நடைபெற்ற சந்திப்பின் பின் கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் –

குறித்த காணி விவகாரம் தொடர்பில் கொழும்பில் உயர்ட்ட கூடங்கள் மூன்று நடைபெற்றிருந்தது. ஆனாலும் மக்களாகிய எமக்கு அழைப்பு இருக்கவில்லை.

இதேநேரம் 17 பேர் காணிகளின் உரிமையாளர்களாக தற்போது தம்மை உறுதி செய்து ஆவணங்களை சமர்ப்பித்துள்ளனர்.

அவர்களின் தரவுக்கமைய காணிகள் நில அளவீடு செய்யப்பட்ட ,ருக்கின்றது. தன்படி எதிர்வரும் 17 ஆம் திகதி குறித்த காணிகள் அளவீடு செய்யப்பட இருக்கின்றன.

ஈதேநேரம் காணி உரிமையாளர்கள் கருத்துக் கூறும்போhது – கடங்த காலங்களில் மக்கள்தான் கணி அளவீடு செய்யப்படுவதை தடுத்ததாக ஒவ்வொரு கூட்டத்திலும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருவதுடன் அதுவே காணிகளை மீள வழங்குவதற்கு தடையாக ,ருப்பதாகவும் குற்றம் சாட்டி வந்தனர்.

,தன்பிரகாரம் ,ம்முறை மக்களாகிய நாம் அவர்களுக்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்குகின்றோம். ஆனாலும் காணி அளவீடு செய்யும் போது மக்களாகிய நாமும் குறித்த இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட வேண்டும் என்று கோரியுள்ளோம். அதற்கு சாதகமான பதில் வழங்கப்பட்டுள்ளது. ,தேநேரம் திஸ்ஸ விகாராதிபதியையும் அழைத்து தானது காணி என்று அவர் கூறும் இடத்தையும் அடையாளர் காட்ட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்.

இதேநேரம் அளக்கப்படும் 17 பேரது காணிகளை தவிர ஏனைய காணிகளின் உரிமங்கள் தொடர்பிலோ அல்லது அக்காணிகளின அளவீடு தொடர்பிலோ எந்தவிதமான கருத்துக்களும் ,ன்றைய கூட்டத்தின்போது  உறுதிபட எமக்கு கூறுப்படவில்லை.

இதேநேரம் அக்காணிகளின் உரிமையாளர்கள் யார் என்பது பலருக்கு தெரியாதிருக்கின்றது. ,தன்காரணமாக 150 பரப்புக்கும் அதிகமான அக்காணிகள் சுவீகரிக்கப்படும் ஆபத்து இருக்கிறது என கூட்டிக்காட்டியிருந்தோம்.

அதற்கு குறித்த கூட்டத்தின்போது எச்சந்தர்ப்பத்தில் உரிமையாளர்கள் வந்து அடையாள ஆவணங்களை சமர்ப்பித்தால் அக்காணிகள் அளவீடு செய்யப்பட்டு மீள ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர்.

ஆனாலும் இதில் எமக்கு சந்தேகம் இருக்கின்றது. குறித்த காணிகளின் உரிமையாளர்கள் எங்கிருந்தாலும் அந்த காணிகளை பெற்றுக்கொள்ள வரவேண்டும் என்றும் அழைப்பு விடுக்கின்றோம்.

இதேநேரம் நில அளவிடு முடிவுற்றபின் அரசு எம்மை ஏமாற்றி சுவிகரிக்கும் முயற்சியை முழுமையான போராட்டத்தை முன்னெடுதது எமக்கான நீதியை பெற முயற்சிப்போம். அதற்கு யாழ் மக்கள் அனைவரது ஒத்துழைப்பும் எமக்கு கிடைக்கும் என்றும் நம்புகின்றோம் என்றனர்.

000

Related posts:

ஜல்லிக்கட்டு தடை விவகாரம்: தமிழ் நாட்டுக்கு மக்களுக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம்!
நாட்டின் மிகப்பெரிய சிமெந்துத் தொழிற்சாலை உதயம் - புதிய உருக்குத் தொழிற்சாலைக்கும் இலங்கையின் அரச தல...
ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ்கள் பத்திரத்தை கையளித்த பிரித்தானிய மற்றும் வடக்கு அயர்லாந்தின் உயர்ஸ்தானி...