சரவனையூர் வெற்றிக் கிண்ணத்தையும் வென்றது வேலணை சலெஞ்சர்ஸ்!

தீவகத்தில் முன்னணி கிரிக்கெற் சுற்று போட்டிகளுள் ஒன்றான சரவனையூர் வெற்றிக் கிண்த்தை வேலணை சலெஞ்சர்ஸ் அணி வென்றுள்ளது.
தீவகத்தின் முன்னிலை அணிகளை உள்ளடக்கியவகையில் சரவனை நாகபூசணி மற்றும் சரவனை வேலவன் இணைந்து நடத்தும் 08 பந்து பரிமாற்றங்களை கொண்ட மென்பந்து சுற்றுத்தொடர் கடந்த ஆகஸ்ட் 29,30 மற்றும் 31 திகதிகளில் சரவனை பொது மைதானத்தில் நடைபெற்றது.
தகுதிபெற்ற 24 அணிகள் மோதிய குறித்த போட்டித் தொடரின் ஆரம்ப போட்டியில் தீவகத்தின் சிறந்த அணியான அல்லைப்பிட்டி சென்.பிலிப்ஸ் அணியை வீழ்த்தி வெற்றியுடன் உள் நுழைந்த வேலணை சலெஞ்சர்ஸ் அணி, அரையிறுப் போட்டியில் காவலூர் சிறுத்தைகள் அணியியை வெற்றி கொண்டு இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
இறுதிப் போட்டியில் செட்டிபுலம் ஐயானார் அணியை வீழ்த்தி கிண்ணத்தை தனதாக்கியது.
இதன்மூலம் தொடர்ந்து மூன்றாவது முறையாகவும் குறித்த கிண்ணத்தை வேலணை சலெஞ்சர்ஸ் கைப்பற்றிய பெருமையையும் தனதாக்கியது
முன்பதாக கடந்த மாதம் இடம்பெற்ற
சலஞ்சேஸ் – ரைற்ரன்ஸ்”
வெற்றிக் கிண்ணத்தையும் வேலணை சலஞ்சேஸ் அணி சுவீகரித்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|