சமாதான நீதவான் நியமன முறையில் புதிய சீர்திருத்தம்!
Tuesday, March 10th, 2026
……
சமாதான நீதவான்களை நியமிக்கும் முறையில் புதிய சீர்திருத்தங்களை நீதி அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது.
புதிய சீர்திருத்தத்தின் பிரகாரம் இனிவருங்காலத்தில் கல்வித் தகுதிகள் மற்றும் வயதுக் கட்டுப்பாடுகள் நியமனங்களுக்குப் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள புதிய நடைமுறையின்படி, இனிவரும் காலங்களில் சமாதான நீதவான் பதவிக்கு விண்ணப்பிப்பவர்களுக்குப் பின்வரும் தகுதிகள் அவசியமாகும்.
அதன்படி க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மூன்று பாடங்களில் சித்தியடைய வேண்டும் என்ற நிபந்தனை க.பொ.த சாதாரண தரமாக குறைக்கப்பட்டுள்ளது.
நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்சவினால் கடந்த நவம்பர் 27ஆம் திகதி வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானியில், சமாதான நீதவான் நியமனத்திற்கான கல்வித் தகைமை மூன்று உயர்தரப் பாடங்களாக இருக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் அந்த விதியை திருத்தியமைத்து, கடந்த 13ஆம் திகதி மற்றுமொரு சிறப்பு வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்ட நீதித்துறை அமைச்சர், க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் இரண்டு அமர்வுகளுக்கு மேல் இல்லாது ஆறு பாடங்களில் C தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளார்.
அவ்வறாயினும், ஒருவருக்கு அந்தத் தகுதி இல்லாவிட்டாலும், ஒரு புகழ்பெற்ற மதத் தலைவரோ அல்லது ஒரு சங்கத் தலைவரோ அவர் சமூகத்திற்குச் செய்யும் முன்மாதிரியான சேவையைக் கருத்தில் கொண்டு சமாதான நீதியரசராக நியமிக்கத் தகுதியானவர் என்று பரிந்துரைத்தால்,
நீதி அமைச்சர் பரிசீலித்து அந்த நபரை சமாதான நீதிபதியாக நியமிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 30 முதல் 75 வயதுக்குட்பட்டவர்கள் மட்டுமே இனி சமாதான நீதவான்களாக நியமிக்கப்படுவர்.
புதிய சீர்திருத்தங்கள் குறித்து நீதி அமைச்சின் மறுசீரமைப்புப் பிரிவின் அதிகாரி ஒருவர் விளக்குகையில், இந்த மாற்றங்கள் புதிய விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே பொருந்தும் எனத் தெளிவுபடுத்தியுள்ளார்.
“75 வயதுக்கு மேற்பட்டவர்களைப் புதிய சமாதான நீதவான்களாக நியமிக்க வேண்டாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
எனினும், ஏற்கனவே இப்பதவியில் இருக்கும் 75 வயதுக்கு மேற்பட்டவர்கள் நீக்கப்பட மாட்டார்கள். அவர்களின் தற்போதைய பணிகளில் எந்த மாற்றமும் இருக்காது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இலங்கையில் 66,315 சமாதான நீதவான்கள் சேவையில் உள்ளனர். இவர்களுக்கான சேவையை மேம்படுத்த அமைச்சு சில முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
நாட்டில் உள்ள அனைத்து சமாதான நீதவான்கள் குறித்த விபரங்களை உள்ளடக்கிய புதிய தரவுத்தளம் ஒன்று உருவாக்கப்படவுள்ளது.
தற்போது சேவையில் உள்ள அனைத்து சமாதான நீதவான்களுக்கும் அவர்களின் கடமைகள் மற்றும் சட்ட நடைமுறைகள் குறித்த விசேட பயிற்சித் திட்டங்களை வழங்க அமைச்சு திட்டமிட்டுள்ளது.
இந்தச் சீர்திருத்தங்கள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சட்ட ஆவணச் சான்றொப்பச் சேவைகளில் அதிக வெளிப்படைத்தன்மையும் தரமும் பேணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related posts:
|
|
|


