சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட இரண்டு கொள்கலன்களிலிருந்து 20 கோடிக்கும் அதிக பெறுமதியான பொருட்கள் சுங்கத்தினால் பொறுப்பேற்பு!

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குக் கொண்டு வரப்பட்ட இரண்டு கொள்கலன்களிலிருந்து 20 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான பொருட்கள் சுங்கத்தினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.
பொறுப்பேற்கப்பட்ட பொருட்களில் வாசனைத் திரவியங்கள், பாதணிகள், சொக்லட் உள்ளிட்ட பல பொருட்கள் அடங்கியுள்ளன.
டுபாய் மற்றும் மலேசிய ஆகிய நாடுகளிலிருந்து குறித்த கொள்கலன்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள முகவரிகளுக்குக் குறித்த பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.
அந்த முகவரிகள் அனைத்தும் போலியானவை என முன்னெடுக்கப்பட்ட ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
000
Related posts:
இலங்கையில், இந்திய மகேந்திரா அன்ட் மகேந்திரா நிறுவனம்!
பாடசாலை மாணவர்களுக்கு Tap - மீண்டும் ஜனாதிபதி ஆட்சேபனை!
பிரதான நகரங்களில் வாகனங்களை நிறுத்துவது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுங்கள் – சாரதிகளுக்கு காவல்துற...
|
|