கோலாகலமாக இடம்பெற்ற யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டு விழா!
Saturday, December 28th, 2024
.
யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டு விழா அரியாலை மகா மாரியம்மன் மண்டபத்தில் நேற்றையதினம் (27) மிகவும் கோலாகலமாக இடம்பெற்றது.
இதன்போது, நிகழ்வின் விருந்தினர்கள் தமிழரின் பாரம்பரிய கலை பண்பாட்டு நிகழ்வுகளுடன் நிகழ்வு மண்டபத்திற்கு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.
யாழ் மாவட்ட பதில் செயலாளர் மருதலிங்கம் பிரதீபனின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், ஓய்வு பெற்ற யாழ் மாவட்ட செயலாளர் செ.பத்மநாதன், முதன்மை விருந்தினராகவும் வடக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் லாகினி நிருபராஜ், ஓய்வு நிலை அழகியல் உதவிக் கல்விப் பணிப்பாளர் கலைஞர் வேல்.ஆனந்தன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் கலைஞர்களுக்கு ‘யாழ் முத்து’ விருது ‘இளங்கலைஞர் விருது’ வழங்கும் நிகழ்வும் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.
000
Related posts:
இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு முகக்கவசம் அணிவதால் எந்த பிரச்சினையும் ஏற்படாது - குழந்தைகள...
3,500 மெட்ரிக் தொன் எரிவாயுவை தரையிறக்கும் பணிகள் ஆரம்பம்!
கடலட்டைப் பண்ணைகளின் மீன் வளம் அழியும் என்பது அப்பட்டமான பொய் - யாழ். கடற்றொழிலாளர்கள் தெரிவிப்பு ...
|
|
|


