கையிருப்பு எதுவுமில்லை –  கச்சா எண்ணெய் விநியோகம் குறித்து ஈரான் அரசு திட்டவட்டம்!……

Saturday, March 21st, 2026


சர்வதேச சந்தைக்குக் மேலதிக கச்சா எண்ணெயை வழங்குவதற்கு தங்களிடம் கையிருப்பு எதுவுமில்லை என ஈரான் அரசு தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கில் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், உலகின் மிக முக்கியமான கடல்வழிப் பாதையான ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்களை ஈரான் தாக்கி வருகிறது.

இதனால் வழித்தடத்தில் கப்பல் போக்குவரத்து வெகுவாக குறைந்துள்ளது.

அதே சமயம் கத்தார், சவூதி அரேபியா நாடுகளில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

கச்சா எண்ணெயை விலை உயர்வை கட்டுப்படுத்த, கடலில் முடங்கியுள்ள ஈரானிய எண்ணெய் மீதான தடைகளை 30 நாட்களுக்கு நீக்குவதாக அமெரிக்கா அறிவித்தது.

இந்நிலையில், சர்வதேச சந்தைக்குக் கூடுதல் கச்சா எண்ணெயை வழங்குவதற்குத் தங்களிடம் கையிருப்பு ஏதுமில்லை என ஈரான் அரசு தெரிவித்துள்ளது.

ஈரானிய எண்ணெய் மீதான தடைகளை நீக்குவதாக அமெரிக்கா அறிவித்த நிலையில், ஈரான் அரசு அச்சலுகையை நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 
000

Related posts: