கின்னஸ் உலக சாதனையை நோக்கி கொழும்பில் அரங்கேறும் 5000 ம் பரத்க் கலைஞர்கள்!
Tuesday, May 12th, 2026
.. .
கின்னஸ் உலக சாதனையை மையமாகக் கொண்டு இலங்கையின் 5,000க்கும் மேற்பட்ட பரதநாட்டிய கலைஞர்கள் பங்கேற்கும் மாபெரும் பரதநாட்டிய அரங்கேற்றம் ஒன்று ஜூன் 14ஆம் திகதி காலை 6 மணிக்கு கொழும்பு காலி முகத்திடலில் நடைபெறவுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர்
தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடக சந்திப்பொன்றை முன்னெடுத்து கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் –
உலக அரங்கில் இலங்கையின் பெருமையை உயர்த்தவுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கலாசார நிகழ்வான சங்கமம் 2026 ஐ அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதில் தான் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன்.
இந்த நிகழ்வில் உலக அளவில் பல்வேறு நாடுகளில் கலை இலக்கிய ஆராய்ச்சி மாநாடுகள் மற்றும் உலக சாதனை நிகழ்ச்சிகளை நடத்தும் இந்தியாவைச் சேர்ந்த சங்கமம் குளோபல் அகடமி மற்றும் இலங்கையைச் சேர்ந்த சங்கமிழ் லியா ஹொலிடேஸ் இணைந்து ஏற்பாடு செய்துள்ள
கின்னஸ் உலகச் சாதனை முயற்சியை நோக்கிய உலகின் மிகப்பெரிய பரதநாட்டிய அரங்கேற்றம் நடைபெறவுள்ளது.
தென்னிந்தியாவில் நடைபெற்ற அயலகத் தமிழர்களின் மாநாட்டில் பங்கேற்றபோது, இந்தியா -ஆசியா- இலங்கை வர்த்தகம் மற்றும் தொழில் சம்மேளனத் தலைவர் மற்றும் சங்கமம் குளோபல் அகடமி நிர்வாகிகளுடன் கலந்துரையாடினேன் .
அந்த சந்திப்பின் போது, இலங்கையின் கலாசாரப் பெருமையை உலக அரங்கில் உயர்த்தும் வகையில் இந்த உலகச் சாதனை முயற்சியை
இலங்கையில் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டது.
இந்த மாபெரும் நிகழ்வில் 5,000க்கும் மேற்பட்ட பரதநாட்டிய கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்த சர்வதேச நிகழ்வு 2026 ஜூன் 14ஆம் தேதி காலை 6 மணிக்கு கொழும்பு காலி முகத்திடலில் நடைபெறவுள்ளது.
இது வெறும் உலகச் சாதனை முயற்சியல்ல கலாசாரம், ஒற்றுமை மற்றும் இலங்கை – இந்தியா நட்புறவை உலகிற்கு எடுத்துக்காட்டும் பெருமைமிகு நிகழ்வாகும் என்றும் தெரிவித்தார்.
இதன் போது
இந்தியாவின் சங்கமம் குளோபல் எகடமியின் நிறுவனர் மற்றும் தலைவர்
K. தினேஷ் குமார்
இலங்கையின்
சங்கமிழ் தியா ஹொலிடேஸ் நிர்வாக இயக்குனர்
சுமாலி தசநாயக்கா ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
000
Related posts:
|
|
|


