காலஅவகாசம் இன்றுடன் நிறைவு!

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு திட்டத்திற்காக மேன்முறையீடு செய்வதற்காக வழங்கப்பட்டிருந்த காலஅவகாசம் இன்றுடன் நிறைவடையுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கு சுமார் 30,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதுடன் இது தொடர்புடைய மேல்முறையீடுகள் மற்றும் பொதுமக்களின் ஆட்சேபனைகளை பிரதேச செயலகங்களில் சமர்ப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கிடைக்கப்பெறும் மேல்முறையீடுகள் நலன்புரி நன்மை சபைக்கு அனுப்பப்படுவதோடு பயனாளர்களை தெரிவு செய்து நலன்புரி கொடுப்பனவை வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்தது.
Related posts:
கடவுச்சீட்டு வழங்குவதில் புதிய நடைமுறை - இன்றுமுதல் நாளொன்றுக்கு 3,500 கடவுச்சீட்டுகள் வழங்க குடிவர...
நாட்டில் சமஷ்டித் தீர்வுக்கோ அல்லது தனிநாட்டுத் தீர்வுக்கோ நாடாளுமன்றம் ஒருபோதும் அனுமதி வழங்காது - ...
2023 ஆம் ஆண்டில் 1769 போலி நாணயத்தாள்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் நிதி அறிக...
|
|