கற்றாளைகளை சட்டவிரோதமாக கொண்டுசெல்ல முற்பட்ட மூவர் ஊர்காவற்றுறை பொலிசாரல் கைது!.

கற்றாளைகளை சட்டவிரோதமாக கொண்டுசெல்ல முற்பட்ட மூவர் ஊர்காவற்றுறை பொலிசாரல் கைதுசெய்யப்பட்டனர்.
குறித்த சம்பவம் இன்று முற்பகல் புங்குடுதீவு நாலாம் வட்டாரப் பகுதியில் இடம்பெற்றது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில் –
புங்குடுதீவு நாலாம் வட்டாரப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் பட்டா ரக வாகனம் ஒன்றை அவதானித்த பொலிசார் அதனை வழிமறித்து சோதனை செய்துள்ளனர்.
இதன்போது குறித்த வாகனத்தில் 150 கிலோவுக்கும் அதிகமன கற்றாளைகள் பொதிசெய்யப்பட்டு சட்டவிரோதமாக கடத்திச் செல்லும் நிலையில் இருந்துள்ளது.
இதையடுத்து குறித்த வாகனத்தின் சாரதி மற்றும் மேலும் இருவர் கதுசெய்யப்பட்டதுடன் வாகனமும் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்துக்கு கொண்டுசெல்லப்பட்டது.
மேலும் வெளி மாவட்டத்தச் சேர்ந்த குறித்த மூவரிடமும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு நாளையதினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளமை குறுப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|