கரை ஒதுங்கிய இராட்சத திமிங்கலம்!
Thursday, December 12th, 2024
இராமநாதபுரம் பாம்பன் கடற்கரையில் நேற்று காலை 2 தொன் எடையும் 18 அடி நீளம் கொண்ட இராட்சத திமிங்கலம் ஒன்று இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த திமிங்கலம் நீல திமிங்கல வகையை சேர்ந்தது எனவும், இவ் வகை திமிங்கலங்கள் 118 அடி நீளம் வரை வளரக்கூடியது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த திமிங்கலத்தின் உடலை பாம்பன் கடற்கரை பகுதியில் புதைப்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்றுவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கரை ஒதுங்கிய இந்த இராட்சத திமிங்கலத்தை பார்ப்பதற்காக ஏராளமான மக்கள் அங்கு வருகை தருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
000
Related posts:
திறன்பேசிகளில் OLED திரை
நாடாளுமன்றில் கோப் குழுவின் விசேட கூட்டம் - எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்வு!
பாடசாலையில் ஏழு மாதங்களாக மின்சாரம் இல்லை – தகவல் கேட்டபோது தொலைபேசியை துண்டித்த உயரதிகாரி!!
|
|
|


