கனரக வாகன காவு வண்டி சிறுபிட்டியில் விபத்து – மின்கம்பம் சேதம்!
Thursday, December 18th, 2025
…..
வாகனங்களை காவிச்செல்லும் கனரக வாகனம் ஒன்று (“மோட்டார் சைக்கிகள்” ) இன்று அதிகாலை வீதியோரம் இருந்த தொலைத்தொடர்பு இணைபுக் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகி விவசாய நிலத்துள் பாய்ந்த சம்பவம் ஒன்று
சிறுப்பிட்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
யாழ் நகரிலிருந்து பருத்தித்துறைக்கு “மோட்டார் சைக்கிள்” களை ஏற்றிச் சென்ற கனரக காவு வாகனமே குறித்த விபத்தில் சிக்கியுள்ளது.
இன்று அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றதாக கூறப்படும் குறித்த விபத்தின் போது குறித்த வாகபம் மற்றும் தொலைத்தொடர்பு இணைபுக் கம்பம் பலத்த சேதங்களுக்குள்ளான போதும் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என அச்சுவேலிப் பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த விபத்து வேகக்கட்டுப்பாட்டை இழந்து ஏற்பட்டதா அல்லது சாரதியின் நித்திரை தூக்கத்தால் ஏற்பட்டதா என்ற போர்வையில் அச்சுவேலொ பொலிசாரால் விசணைகள் மேற்கொள்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது.
Related posts:
|
|
|


