கணவன் தாக்கியதால் நான்கு மாத குழந்தையின் தாய் உயிர்மாய்ப்பு!

Saturday, March 22nd, 2025

யாழில் கணவன் தாக்கியதால் மனவிரக்தியடைந்த இளம் தாய் ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். இதன்போது கட்டுடை, அரசடி வீதி பகுதியைச் சேர்ந்த யோ.நாகராணி (வயது 20) என்ற, 4 மாத குழந்தையின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

கடந்த 20 ஆம் திகதி குறித்த பெண்ணுக்கும் கணவருக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடு காரணமாக கணவன் அவரை தாக்கியுள்ளார். இதனால் மனவிரக்தியடைந்த குறித்த பெண் நேற்றிரவு தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

Related posts:

எட்டு வருடங்களில் இரட்டிப்பாக அதிகரித்த வாகனங்களின் எண்ணிக்கை - அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா!
இலங்கையில் ஓர் அலகு மின்சாரத்தைக் கூட பயன்படுத்தாத 450,000 குடும்பங்கள் - மின்சார நுகர்வோர் சங்கத்தி...
வங்கி வட்டி வீதங்களைக் குறைக்காத வர்த்தக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் தொடர்பில் மத்திய வங்கி அவ...