கடவுச்சொற்களை பகிர வேண்டாம் – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!

Saturday, July 26th, 2025

இலங்கையில் சைபர் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையின் கணனி அவசர பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

குறித்த பிரிவின் அறிக்கையின்படி 2025ஆம் ஆண்டில் மாத்திரம் 5400க்கும் மேற்பட்ட சைபர் குற்றங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

Facebook, WhatsApp, Instagram, Snapchat மற்றும் TikTok போன்ற சமூக ஊடக தளங்களை மையப்படுத்தியே இந்த குற்றங்கள் பதிவாகியுள்ளன.

அதிலும் Facebook உடன் தொடர்புடையதாக 90 வீதக்குற்றங்கள் பதிவாகியுள்ளன.

AI என்ற செயற்கை நுண்ணறிவு கருவிகளின் தவறான பயன்பாடும் இந்த குற்றங்களில் அடங்கியுள்ளதாக கணினி அவசர சேவைப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதனை கருத்திற்கொண்டு பயனர்கள் கடவுச்சொற்களை ஒருபோதும் பகிர வேண்டாம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

000

Related posts: