கடந்த 7 மாதங்களில் 1,355 பேர் வீதி விபத்துக்களில் உயிரிழப்பு – பொலிசார் தகவல்! 

Tuesday, July 29th, 2025

இந்த ஆண்டு இதுவரை 1,355 பேர் வீதி விபத்துக்களில் உயிரிழந்துள்ளதாக,பொலிசார் தெரிவித்துள்ளனர்.  

இதேவேளை 2024 ஆம் ஆண்டில், நாடு முழுவதும் வீதி விபத்துகளால் மொத்தம் 2,521 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரடெரிக் வூட்லர் குறிப்பிட்டார்.  

தினமும் நிகழும் உயிரிழப்புகளைக் குறைப்பதில் பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்று அவர் மேலும் வலியுறுத்தினார்.

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகள் மீது, சட்டம் கடுமையாக அமல்படுத்தப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

000

Related posts: