ஜப்பான் வேலைவாய்ப்பு வதந்தி – பிரதமர் அலுவலகம்!

Friday, September 29th, 2017

தமது அலுவலகம் மூலம் ஜப்பானில் வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுக்கும் எந்த வேலைத்திட்டங்களும் மேற்கொள்ளப்படவில்லை என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அறிக்கையொன்றை வௌியிட்டு பிரதமர் அலுவலகம் இதனை தெரிவித்துள்ளது.தமது அலுவலகம் ஊடாக ஜப்பானில் தொழில் பெற்றுத்தருவதாக கூறி பல்வேறு நபர்கள் மற்றும் நிறுவனங்கள் நிதி மோசடியில் ஈடுபடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.இவ்வாறு மோசடியில் ஈடுபடும் நபர்கள் அல்லது நிறுவனங்கள் தொடர்பில் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு அறிவிக்குமாறு பிரதமர் அலுவலகம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Related posts:

விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரக் கூடாது - செல்வம் அடைக்கலநாதன்!
மக்களின் திசைதிருப்ப சர்ச்சைக்குரிய அறிக்கைகள் வெளிவருகின்றன - தேர்தல் கண்காணிப்பு அமைப்பு குற்றச்சா...
அரச - தனியார்துறை ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்ய ஊக்குவிக்க வேண்டும் – கல்வி அமைச்சர் தினேஷ் கு...