கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பயணித்த ஜீப் வண்டி மோதியதில் யாசகம் செய்யும் பெண் உயிரிழப்பு!
Monday, December 9th, 2024
அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பயணித்த ஜீப் வண்டி, வென்னப்புவ பகுதியில் பெண் பாதசாரி ஒருவரை மோதியதில் அவர் உயிரிழந்ததாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் 70 வயதுடைய யாசகம் செய்யும் பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (8) பிற்பகல் கொழும்பு – புத்தளம் வீதியில் போலவத்தை சந்தியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த பெண், வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினரின் சாரதியான 60 வயதுடைய நபர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
தேயிலை உற்பத்தி அதிகரிப்பு!
மாகாண சபை தேர்தல் தொடர்பில் உயர் நீதிமன்றத்திற்கு அறிவிப்பு!
வேலை வாய்ப்பை வழங்கக்கூடிய புதிய கல்வித்திட்டம் - நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர்!
|
|
|


