எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் தமிழக மீனவர்கள் 10 பேர் கடற்படையினரால் கைது!
Thursday, February 20th, 2025
இலங்கை கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் தமிழக மீனவர்கள் 10 பேரைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. மீனவர்களின் 3 விசைப்படகுகளையும் கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் 10 பேரும் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
00
Related posts:
இலங்கை சுற்றுலா பயணத்தை மேற்கொள்வதற்கு பாதுகாப்பான நாடு - இவ்வருடம் 1.2 மில்லியன் சுற்றுலா பயணிகள் இ...
ரணில் தலைமையிலான புதிய அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற தயார் - இந்தியா அறிவிப்பு!
2024 நிகழ்நிலை காப்புச் சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலம் வர்த்தமானியில் பிரசுரிப்பு!
|
|
|


