ரணில் தலைமையிலான புதிய அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற தயார் – இந்தியா அறிவிப்பு!
Friday, May 13th, 2022
ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க நேற்று பதவியேற்றார். இந்த நிலையில், இலங்கையின் புதிய அரசாங்கத்திற்கு இந்தியா ஆதரவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தூதரகத்தின் ருவிட்டர் பதிவில், “இலங்கை பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவிப்பிரமாணம் செய்துகொண்டதன் அடிப்படையில், ஜனநாயக நடைமுறைகளுக்கு இணங்க அமைக்கப்பட்ட இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்த்துள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் அரசியல் ஸ்திரத்தன்மை குறித்தும் நம்பிக்கைகொள்கின்றது“ என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதைப்போல இலங்கை மக்களுக்கான உதவிகள் தொடரும் எனவும் தூதரகம் தெரிவித்துள்ளது.
000
Related posts:
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மீண்டும் வரிச் சலுகையுடன் வாகன அனுமதிப் பத்திரம் வழங்கத் தீர்மானம் – பி...
தென் சீனக் கடலில் விவகாரம் - பிலிப்பைன்ஸ் அரசு பெய்ஜிங்கில் உள்ள தனது தூதரக அதிகாரியை திரும்பப் பெற...
இலங்கை வரும் சீனாவின் பயிற்சி கப்பல் - கடல்சார் சமூகத்தைக் கட்டியெழுப்ப சீனாவின் பரந்த முயற்சியின் ஒ...
|
|
|
சாவால்களை வெற்றிகொள்ளும் நம்பிக்கையுடன் வெளிக்கிழமை ஜெனிவா செல்கிறது அமைச்சர் பீரிஸ் தலைமையிலான இலங்...
வவுனியா மாவட்டத்தில் அதிகரிக்கும் எலிக்காய்ச்சல் - பொது மக்களை அவதானமாக இருக்குமாறு சுகாதாரப் பிர...
அமைச்சர் டக்ளஸ் ஆலோசனை - திலீபன் MP நடவடிக்கை - பணிக்கர் புளியங்குளம் மக்களின் நீண்ட நாள் கனவு நனவான...


