எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் தமிழக மீனவர்கள் 10 பேர் கடற்படையினரால் கைது!
Thursday, February 20th, 2025
இலங்கை கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் தமிழக மீனவர்கள் 10 பேரைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. மீனவர்களின் 3 விசைப்படகுகளையும் கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் 10 பேரும் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
00
Related posts:
மண்ணெண்ணைக்கு தட்டுப்பாடு கிடையாது - இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் அறிவிப்பு!
மக்கள் போராட்டம் என்ற போர்வையில் அரச கட்டடங்களை பலவந்தமாக ஆக்கிரமிப்போருக்கு எதிராக சட்டநடவடிக்கை – ...
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுடன் ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட நிர்வாக பொறுப்பாள...
|
|
|


