எமது முயற்சிகள் சாதனைகளாக அறுவடை செய்யப்படுகின்றன – டக்ளஸ் தேவானந்தா பெருமிதம்!

Thursday, February 5th, 2026


~~

கடந்த காலங்களில் எமது மக்களின் எதிர்காலத்தை வலுப்படுத்தும் நோக்கில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினால் முன்னெடுக்கப்பட்ட வேலைத் திட்டங்கள் தற்போது சாதனைகளாக அறுவடை செய்யப்படுவது பெருமையளிப்பதாக செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அண்மையில் இடம்பெற்ற தேசிய ரீதியிலான உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் 16 வயதிற்கு உட்பட்ட பிரிவில் புங்குடுதீவு மகா வித்தியாலய அணி இரண்டாம் இடத்தினை பெற்றுள்ளமை தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே இதனைத் தெரிவித்த செயலாளர் நாயகம், தேசிய ரீதியிலான பாடசாலைகளுடன் ஒப்பிடுகின்றபோது, வளப்பற்றாக் குறைகள் காணப்படுகின்ற நிலையிலும், தேசிய ரீதியிலான இந்த வெற்றிக்காக உழைத்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.

மேலும், 90 களின் ஆரம்பத்தில், தீவக மக்களைப் போன்றே இந்தப் பாடசாலையும் அனைத்து தரப்புக்களினாலும் கைவிடப்பட்டிருந்த போது, இதன் கல்விச் செயற்பாடுகளை முன்கொண்டு செல்வதற்கு மேற்கொண்ட நடவடிக்கைகளையும் இதன்போது நினைவுபடுத்தினார்.

1990 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையை தொடர்ந்து, யாழ்ப்பாணத்திற்கும் தீவக பகுதிகளுக்குமான தொடர்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில்,

தீவகத்தில் சிக்கியிருந்த மாணவர்களின் கல்வி செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு தீர்மானித்த தோழர் டக்ளஸ் தேவானந்தா, முதற் கட்டமாக புங்குடுதீவு மகா வித்தியாலயத்தில் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் நோக்குடன் அதிபர் மற்றும் ஆசிரியர் நியமனங்களை மேற்கொண்டதுடன், அவர்களுக்கான மாதாந்த கொடுப்பனவுகளையும் கட்சி நிதியிலிருந்து வழங்கியிருந்தார்.

அத்துடன், வேலனை, ஊர்காவற்றுறை போன்ற பிரதேசங்களில் இருந்த மாணவர்களையும் ஒருங்கிணைத்து இப்பாடசாலையில் கல்வி கற்பதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்ததுடன், மாணவர்கள் தங்கியிருந்து கல்வி கற்பதற்கான விடுதிகளும் உருவாக்கப்பட்டிருந்தன.

தொடர்ந்து வந்த காலப் பகுதியில், கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான நிதி ஒதுக்கீடுகள், அமைச்சர்களுக்கான ஒதுக்கீடுகள் போன்றவற்றின் ஊடாக காலத்துக்கு காலம் பாடசாலையின் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் ஆளணிகளை விரிவுபடுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டதுடன், புங்குடுதீவு மத்திய கல்லூரியாக தரமுயர்த்தப்படுவதற்கும் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்.

இவ்வாறான நிலையிலேயே, குறித்த பாடசாலையின் 16 வயதிற்கு உட்பட்ட அணியினர் தேசிய மட்டத்தில் இரண்டாவது இடத்தினை பெற்றுக் கொண்டுள்ளனர்.

குறித்த பிரிவில், முதலிடத்தினை வயாவிளான் மத்திய மகா வித்தியாலயம் பெற்றிருந்தது.

இடம்பெயர்ந்து இருந்த அந்தப் பாடசாலையையும், மீண்டும் சொந்த இடத்தில் இயங்கச் செய்து அபிவிருந்தி செய்ததில் தோழர் டக்ளஸ் தேவானந்தாவின் பங்களிப்பும் உழைப்பும் கணிசமானது என்பது குறிப்பிடத்தக்கது.

ஊடகப் பிரிவு:- ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி.)

Related posts: