எமது மக்கள் நலன்  சேவைகள் குறித்துவடக்கின் ஆளுநருக்கு சவல் விடுத்த ஈ.பி.டி.பி!

Tuesday, April 28th, 2026


……
வடக்கின் ஆளுநராக இருந்தாலும் சரி யாராக இருந்தாலும் சரி ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி கடந்த காலத்தில் செய்த மக்கள் நலன் திட்டங்கள் சேவைகளுக்கு சவால் விடுவார்களாக இருந்தால் அவர்களுடன் பகிரங்கமாக விவாதிப்பதற்கு எந்த ஒரு சூழலிலும் தாம் தயாராக இருப்பதாக ஈ.பி.டி.பியின் ஊடகச் செயலாளர் பன்னீர்செல்வம் ஸ்ரீகான் சவால் விடுத்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இப்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில், வடக்கின் ஆளுநர் கடந்த அரசுககை விட தற்போதுள்ள அரசே மக்களுக்கு அதிக சேவைகளை செய்கின்றது என்று அண்மையில் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் உங்கள் கருத்து என்ன என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில் –

இன்றைய வடக்கின் ஆளுனர் அன்று யாழ் மாவட்டத்தின் அரச அதிபராக இருந்த ஒருவர்.

அவருடைய காலத்தில் எவ்வாறான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன  என்பதும், யார் யார் அந்த வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருந்தனர் என்பது தொடர்பிலும் அவர் நன்கு அறிந்திருப்பார் என நினைக்கின்றேன்.

அண்மையில் கூட எமது கட்சியின் நெடுந்தீவு பிரதேச சபையின்யின் உறுப்பினர்கள் ஆளுநரை சந்தித்து தமது பிரதேசம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து தெரிவித்திருந்தனர்.

இதன்போது குறித்த பிரச்சினைகளை  நிறைவு செய்யும் சம்மதத்தையும் ஆளுநர் வழங்கியிருந்தார்.

இருந்தும் ஆளுநர் இவ்வாறு கருத்தை வெளியிட்டிருக்கின்றார்.

நான் நினைக்கின்றேன்
அவர் இன்றைய  ஜனாதிபதியின் பிரதினிதியாக இருப்பதால் உண்மைகளை கூறமுடியாத தர்மசங்கடமான நிலையில் இருக்கக்கூடும் என்று.

ஆனால் நான் ஒரு விடையத்தை இங்கு பதிவு செய்ய விரும்புகின்றேன்.

யாராக இருந்தாலும் சரி அது வடக்கின் ஆளுநராக இருந்தாலும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி கடந்த காலத்தில் செய்த மக்கள் நலன் திட்டங்கள் சேவைகளோடு சவால் விடுவார்களாக இருந்தால் அவர்களுடன் பகிரங்கமாக விவாதிப்பதற்கு  எந்த ஒரு சூழலிலும் நாம் தயாராகவே இருக்கின்றோம்.

ஊடகங்களுக்காக கிடைக்கின்ற சந்தர்ப்பங்களில் கருத்துக்களை கூறிவிட்டுப் போகின்றவர்கள் நாமல்ல.

இன்று சமூக ஊடகங்களில் கருத்துக் கூறுபவர்கள் எவராக இருந்தாலும் பொது வெளியில் எம்முடன் பகிரங்க விவாதத்துக்கு வாருங்கள் நாம் எமது மக்கள் நலன் செயற்பாடுகளை நிரூபிக்க தயாராகவே இருக்கின்றோம் –  என்றார்.

Related posts:

பொருளாதார நிலைமைகளால் பாதிக்கப்பட்ட சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளுக்கு சலுகை வழிமுறைகளை அறிவ...
திரைமறைவில் நடக்கும் ஆட்சிக் கவிழ்ப்புச் சூழ்ச்சிகள் தவிடுபொடியாகும் – ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு!
உயிர்த்த ஞாயிறு விடயத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை பக்கச்சார்பான முறையில் செயற்படுகின்றது...