ஊர்காவற்றுறை பிரதேச சபையில் கட்சியின் உறுப்பினர்களது செயற்பாடுகள் குறித்து விசேட ஆராய்வு!

Wednesday, May 27th, 2026


…..
மக்கள் மயப்படுத்தப்படும் வகையில் ஊர்காவற்றுறை பிரதேச சபையின் கட்சிசார் உறுப்பினர்கள் ஊடாக முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளின் பெறுபேறுகள் குறித்த கலந்தாய்வொன்றை செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று (26) முன்னெடுக்கப்பட்டது.

கட்சியின் ஊர்காவற்றுறை பிரதேச நிர்வாக செயலாளர் ம.ஜெயகாந்தனின் பிரசன்னத்க்துடன் குறித்த பிரதேச சபையின் கட்சிசார் உறுப்பினர்களான கி.புவி, காந்தீபன், அ.விஜயசிங்கம், சிவகுமார் ஆகியோரின் பங்கேற்புடன்  நடைபெற்ற குறித்த கலந்தாய்வின் போது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், தேவைப்பாடுகள் குறித்து  கட்சியின் யாழ் தலைமை அலுவலகத்தில்  விரிவாக ஆராய்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: