ஊடகர் பாரதிக்கு சிறப்பு மலர் வெளியீடு -சாதிக்கும் ஊடகர்களுக்கு”பாரதி” விருது – ஓராண்டு நினைவு நாளில் அறிவிப்பு!
Saturday, February 7th, 2026
……
சிறந்த ஊடகப் பணியை மேற்கொள்ளும் தமிழ் ஊடகர்களுக்கு வருடாவருடம் “பாரதி விருது” வழங்கி கௌரவிக்ஜப்படும் என்றும் இதனூடாக மூத்த ஊடகர் பாரதியின் வரலாறு வரலாற்றில் பதியப்படும் எனவும் அமரரது ஓராண்டு நினைவுமலர் வெளியீட்டு நிகழ்வில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மூத்த ஊடகவியலாளர் பாரதியின் ஓராண்டு நினைவு நாளை முன்னிட்டு நினைவு மலர் வெளியீடு இன்று (07) வெளியிடப்பட்டது.
கடந்த 2025 ஆம் ஆண்டு மாசி மாதம் 9 ஆம் திகதி உடல் நலக் குறைவு காரணமாக காலமான அமரர் பாரதியின் ஓராண்டு நினைவு மலர் வெளியீடு இன்று (7) யாழ் ஹம்ஷியா மஹாலில் நடைபெற்றது.
பாரதியின் நினைவுகள் வரலாறுகள், சமூகத்துக்குச் செய்து சென்ற கடமைகள் உள்ளிட்டவற்றை சுமந்து நினைவுரைகள் பலதரப்பட்டவர்களால் நிகழ்த்தப்பட்ட இந்த நிகழ்வில், யாழ் பல்கலைப் பேராசிரியர்கள், கல்விமான்கள், ஊடகவியலாளர்கள், அபிமானிகள் உறவுகள் என பலரது ஒன்று பிரசன்னத்துடன் நடைபெற்ற குறித்த நிகழ்வின்போது ” பாரதி ஒரு மனிதநேய ஊடகன்” என்ற மலரும் வெகியிட்டு வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|
|


