உள்ளக மைதான விவகாரம் – பகைய பூங்கா தான் வேண்டுமென அடம் பிடித்துக் கொண்டிராது மாற்றிடங்களை நாடுவது சிறந்தது – சீ.வி.கே வலியுறுத்து

Friday, March 27th, 2026


……..
யாழ் பழைய பூங்கா வழாகத்தில் தான் உள்ளக விளையாட்டு மைதானத்தை அமைக்க வேண்டும் என்று அடம்பிடித்துக் கொண்டிருப்பதை விடுத்து மாற்றிடத்தை நாடுவது சிறந்தது என சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் அதற்கான இடங்களை வழங்க பலர் முன்வந்துள்ள நிலையில் அது தொடர்பில் நடவடிக்கை எடுப்பது அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

யாழ் மாவட்ட அரச அதிபர் ம.பிரதீபனின் ஒழுங்கமைபில் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று (28) அதன் தலைவர் அமைச்சர் இ.சந்திரசேகரன் தலைமையில் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், நாடாழுமன்ற உறுப்பினர்களான எஸ்.ஸ்ரீதரன், ச.ஸ்ரீபவானந்தராஜா, ஜெ.ரஜீவன், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், முப்படை மற்றும் பிரதேச செயலர்கள், துறைசார் அதிகாரிகளது பிரசன்னத்துடன் நடைபெற்றது.

இதன்போது மாவட்டத்தின் பல்வேறு விடையங்கள் ஆராயபட்ட நிலையில் குறித்த உள்ளக விளையாட்டு மைதானம் அமைப்பதற்காள நிதி கிடைத்தும் அதன் அமைவிடம் தொடர்பில் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டிருப்பதால் நிர்மாணப் பணிகளை முன்னெடுக்க முடியாத நிலை காணப்படுகின்றது.
என அதிகாரிகளால் சுட்டிக்காட்டப்பட்டது.

இன்னிலையில் உடுவில் பிரதேச சபை மற்றும் கோப்பாய் பிரதேச சபைகள் அதற்கான இடத்தை தாம் வழங்குவதாக எழுத்துமூலமாக வழங்கியுள்கதாக கூறியிருந்தனர்.

இன்னிலையில் குறித்த உள்ளக மைதானத்தை யாழ் நகரில் தான் அமைக்க வேண்டும் என்றோ ஏற்கனவே இனங்காணப்பட்ட இடத்தில் தான் அமைக்க வேண்டும் என்றோ அடம்பிடித்துக் கொண்டிராது வேறு தெரிவுகளை அவதானத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வகியுறுத்தினார்.

0000

Related posts: