உலகை மிரட்டிவரும் புற்றுநோய்க்கு தடுப்பூசி மருந்தை கண்டுபிடித்து விட்டதாக   ரஷ்யா அறிவிப்பு!

Monday, December 23rd, 2024

உலகை மிரட்டிவரும் புற்றுநோய்க்கு தடுப்பூசி மருந்தை கண்டுபிடித்து விட்டதாக நேற்றையதினம் ரஷ்யா அறிவித்துள்ளது.

கேன்சர் எனப்படும் புற்றுநோயைக் குணப்படுத்த பல நாடுகள் தடுப்பூசி கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் நிலையில் mRNA அடிப்படையிலான தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக ரஷ்ய சுகாதாரத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

ரஷ்யா விஞ்ஞானிகள் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசியை உருவாக்கும் முயற்சியில் இறுதிக் கட்டத்தில் இருப்பதாகவும், விரைவில் அது பயன்பாட்டுக்கு வரும் என்றும் அந்நாட்டின் ஜனாதிபதி விளாடிமிர் புடின் அண்மையில் தெரிவித்திருந்தார்.

அதன்படி புற்றுநோய்க்கு தடுப்பூசியை உருவாக்கி விட்டோம் எனவும், இந்த தடுப்பூசி 2025ஆம் ஆண்டுமுதல் பாவனைக்கு வரும் எனவும், குறித்த தடுப்பூசிகளை நோயாளிகளுக்கு இலவசமாக வழங்க உள்ளதாகவும் ரஷ்ய சுகாதாரத் துறை அமைச்சு  அறிவித்துள்ளது.

000

Related posts:


சுற்றுலாப் பயணிகளை சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை - இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சப...
கையிருப்பிலுள்ள தடுப்பூசிகள் காலாவதியாகும் அபாயம் - செலுத்திக்கொள்ளாதோருக்கு சுகாதார சேவைகள் பிரதிப்...
தேசிய மின்கட்டமைப்புக்கு நுரைச்சோலை முழு பங்களிப்பு - மின்சாரம் தடைப்பட்டமையை நாசவேலையாகவே கருத முடி...