உயர்தரப் பரீட்சைகள் மீண்டும் ஒத்திவைப்பு –  டிசம்பர் 4 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும்என பரீட்சை திணைக்களம் அறிவிப்பு!

Thursday, November 28th, 2024

சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட 2024 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை மேலும் மூன்று நாட்களுக்கு நடத்துவதில்லை என பரீட்சை திணைக்களம் தீர்மானித்துள்ளது.

அத்துடன் உயர்தரப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் 4 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இதன்படி உயர்தரப் பரீட்சைகள் நவம்பர் 30, டிசம்பர் 2, 3 ஆம் திகதிகளில் நடைபெற மாட்டாது.

இதேவேளை நாட்டில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக 27, 28 மற்றும் 29 ஆகிய மூன்று தினங்களுக்கு உயர் தரப் பரீட்சையை நடத்துவதில்லை என முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

சீரற்ற காலநிலை தணிந்த போதிலும் பாதிக்கப்பட்ட மாணவர்களின் நலன் கருதி இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: