ஈ.பி.டி.பி. கட்சியின் கோப்பாய் பிரதேச செயற்பாடுகள் தொடர்பாக..
Friday, March 7th, 2025
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கோப்பாய் பிரதேச நிர்வாக செயலாளராக செயற்பட்டு வந்த தோழர் ஐங்கரன்(இராமநாதன் ஐங்கரன்) அவர்கள், தொடர்ந்தும் கட்சியின் அடிப்படை உறுப்பினராக செயற்பட ஆர்வமாக இருக்கின்ற போதிலும், தனிப்பட்ட காரணங்களுக்காக சிறிது காலம் கோப்பாய் பிரதேச நிர்வாக செயலாளர் என்ற பொறுப்புக்களில் இருந்து ஒதுங்கி இருக்க விரும்புவதாக எமக்கு தெரிவித்துள்ள நிலையில்,
குறித்த விடயத்தினை பரிசீலனை செய்த கட்சியின் தலைமைக்குழு, தோழர் ஜங்கரனுக்கு இருக்கும் ஜனநாயக உரிமையையும் தனிமனித சுதந்திரத்திற்கும் மதிப்பளித்து அவரின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள தீர்மானித்துள்ளது.
எனவே, எமது செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் ஆலோசனைக்கு அமைய, தோழர் ஐங்கரன் ஓய்வில் இருக்கின்ற காலப் பகுதியில், தேர்தல் விடயங்கள் உட்பட்ட கோப்பாய் பிரதேச செயற்பாடுகள் தொடர்பாக தேசிய அமைப்பாளர் என்ற அடிப்படையில் என்னை தொடர்பு கொள்ளுமாறு எமது செயற்பாட்டாளர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பொது மக்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றேன்.
நன்றி
- கீபி (பசுபதி சீவரத்தினம்)
-தேசிய அமைப்பாளர்,
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி
தொடர்புகளுக்கு: 0768716586
Related posts:
|
|
|


