ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிக்கவில்லை – சர்வதேச அணுசக்தி முகமையின் தலைவர்!
Tuesday, March 3rd, 2026
……
ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிப்பதற்கான திட்டமிட்ட அல்லது ஒருங்கிணைந்த செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதற்கான எந்தவொரு ஆதாரமும் தமக்குக் கிடைக்கவில்லை என ஐக்கிய நாடுகள் சபையின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான IAEA தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் ஈரான் மீது முன்வைத்து வரும் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) பணிப்பாளர் நாயகம் ரஃபேல் க்ரோஸி (Rafael Grossi) வெளியிட்டுள்ள இந்த அறிக்கை முக்கியத்துவம் பெற்றுள்ளது.
க்ரோஸியின் அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்கள் –
ஈரானில் அணு ஆயுதங்களைத் தயாரிப்பதற்கான ‘முறையான மற்றும் கட்டமைக்கப்பட்ட’ எந்தவொரு திட்டத்தையும் தமது ஆய்வாளர்கள் இதுவரை அடையாளம் காணவில்லை என க்ரோஸி தெரிவித்தார்.
60 சதவீத செறிவூட்டல்: அதேவேளை, ஈரான் தனது யுரேனியத்தை 60 சதவீதத் தூய்மை வரை செறிவூட்டியுள்ளதை அவர் உறுதிப்படுத்தினார்.
சாதாரண சிவிலியன் எரிசக்தித் தேவைகளுக்கு இந்த அளவு செறிவூட்டல் அவசியமற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
099
Related posts:
|
|
|


