ஈரானுக்கும் உரேனியத்தை செறிவூட்ட முழு உரிமை உள்ளது – பச்சைக்கொடி காட்டிய ரஷ்யா!
Tuesday, May 19th, 2026அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் உள்ள மற்ற நாடுகளைப் போலவே, ஈரானுக்கும் அமைதியான நோக்கங்களுக்காக உரேனியத்தை செறிவூட்டுவதற்கு முழு உரிமை உள்ளது என்று ரஷ்யா பகிரங்கமாக அறிவித்துள்ளது
குறிப்பாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கே லாவ்ரோவ் மாஸ்கோவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உலக நாடுகளைத் திரும்பிப் பார்க்க வைக்கும் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். இதன்போதே அவர் இக்கருத்தையும் கூறியுள்ளார்.
அதேசமயம், வாஷிங்டனுக்கும் தெஹ்ரானுக்கும் இடையிலான நேரடிப் பேச்சுவார்த்தைகளில் ரஷ்யா எந்த வகையிலும் தலையிடாது என்றும் அவர் மிகவும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவும் ஈரானும் இணைந்து, அவர்கள் இரு தரப்பும் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளும் எந்தவொரு அமைதித் தீர்வையும் ரஷ்யா முழுமையாக ஆதரிக்கும் என்று லாவ்ரோவ் அறிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஈரானுக்குக் கடுமையான நெருக்கடிகளைக் கொடுத்து வரும் நிலையில், தற்போது ரஷ்யா கூறியுள்ள கருத்து ஈரானின் அணுசக்தி விவகாரத்தில் ஒரு மிகப்பெரிய நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.
அதுமடுமல்லாது ட்ரம்பின் அதிரடி அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், ஈரானின் யுரேனியம் செறிவூட்டும் உரிமைக்கு ரஷ்யா பகிரங்கமாக ஆதரவு தெரிவிப்பது ஒரு மாபெரும் ராஜதந்திர நகர்வாகப் பார்க்கப்படுகிறது.
ஒருபுறம் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஆதரிப்பதாகக் கூறினாலும், ஈரானின் அணுசக்தி உரிமைக்குக் குரல் கொடுத்து அமெரிக்காவிற்கு ஒரு மெல்லிய எச்சரிக்கையை ரஷ்யா விடுத்துள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|
|


