இளைஞனின் கையை முறித்த விவகாரம் – நெல்லியாடி பொலிசாரை மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு!

Tuesday, February 25th, 2025

நெல்லியடி – மந்துவில் பகுதியில் வாசிக்கும் இளைஞர் ஒருவரை தாக்கி கையை முறித்த குற்றச்சாட்டு தொடர்பில் நெல்லியடிப்  பொலிஸாரை எதிர்வரும் நான்காம் திகதி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்துக்கு விளக்கம் அளிக்க வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த  விடயம்  தொடர்பில் தெரியவருவதாவது,

நெல்லியடி பகுதியில் ஸ்ரீலங்கா ரெலிக்கொம்முக்கு சொந்தமான கேபிள் வயர்கள் அறுக்கட்டமை தொடர்பில் மந்துவில் பகுதியில் வசிக்கும் இளைஞர் நெல்லியாடிப் பொலிசாரால் கடந்த 18 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட தன்னை, பொலிஸ் காவலில் தாக்கி கையை முறித்தார்கள் என பாதிக்கப்பட்ட இளைஞன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்ததோடு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாட்டையும் பதிவு செய்தார்.

இந்நிலையில் குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் விளக்கமளிக்க வருமாறு நெல்லியடிப்  பொலிசாருக்கும் குறித்த பிரதேசத்துக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகருக்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகம் அழைப்புக் கட்டளை அனுப்பியுள்ளது.

000

Related posts: