இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 212 உலங்குவானூர்தி விபத்து!

Friday, May 9th, 2025

இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 212 உலங்குவானூர்தி ஒன்று இன்று காலை விபத்துக்குள்ளானது.

ஹிங்குரக்கொட முகாமில் இருந்து பயிற்சிக்காக புறப்பட்ட குறித்த உலங்குவானூர்தி மாதுரு ஓயாவில் விபத்துக்குள்ளானதாக விமானப்படை பேச்சாளர் விங் கமாண்டர் எரந்த கீகனகே தெரிவித்துள்ளார்.

உலங்குவானூர்தியின் விமானிகள் இருவரும் பாதுகாப்பாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்  இந்த உலங்குவானூர்தியில் விமான கட்டுப்பாட்டாளர்கள் இருவர் உட்பட 11 பேர் பயணித்துள்ளனர்.

அவர்களில் 9 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக விமானப்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்

000

Related posts: