இலங்கை வந்தடைந்தார் இந்திய துணை ஜனாதிபதி!
Sunday, April 19th, 2026இந்திய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று காலை இலங்கையை வந்தடைந்தார்.
உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கைக்கு வருகைத் தந்துள்ள அவர் நாளையதினம் (20.04.2026) வரை நாட்டில் தங்கியிருப்பார்.
இந்திய துணை ஜனாதிபதியுடன் இணைத்து 49 பேர் கொண்ட குழுவொன்றும் நாட்டுக்கு வருகை தந்துள்ளது.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து அவருக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் குமார கமகே உள்ளிட்ட இலங்கை பிரதிநிதிகளால் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த விஜயத்தின் ஒரு பகுதியாக அவர் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய உள்ளிட்டவர்களை சந்தித்து இரு தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார்.
அத்துடன் அரசியல் பிரதிநிதிகளோடு அவர் கலந்துரையாடலிலும் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதை மையமாகக் கொண்டு பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் பரிமாறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
000
Related posts:
|
|
|


