இலங்கை – தென்னாப்பிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் – வெற்றி இலக்கை எட்டுமா இலங்கை!
Monday, December 9th, 2024
இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று இடம்பெற்றது.
இதன்படி 348 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை அணி இன்றைய நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 205 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
முன்னதாக தமது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்க அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து, 317 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக பிரபாத் ஜெயசூரிய அதிகபட்சமாக 5 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
முன்னதாக இலங்கை அணி தமது முதல் இன்னிங்ஸிற்காக 328 ஓட்டங்களையும், தென்னாப்பிரிக்க அணி 358 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டது. போட்டியின் ஐந்தாம் நாள் ஆட்டம் நாளை இடம்பெறவுள்ளது.
00
Related posts:
டி20 உலகக்கிண்ணத்தை மேற்கிந்தியா வெல்ல உதவிய தர்மசேனா!
ஜிம்பாப்வேயுடன் 2-வது டெஸ்ட் - வெற்றியின் விளிம்பில் வெஸ்ட் இண்டீஸ்!
டியாகோ கார்சியா தீவிலிருந்த இலங்கை தமிழருக்கு இங்கிலாந்தில் தங்க 06 மாதங்கள் அனுமதி!
|
|
|


