இலங்கை தனது முதல் அணு மின் நிலையத்துக்கான ஐந்து சாத்தியமான இடங்களை அடையாளம் கண்டுள்ளது!
Saturday, July 26th, 2025
இலங்கை தனது முதல் அணு மின் நிலையத்துக்கான ஐந்து சாத்தியமான இடங்களை அடையாளம் கண்டுள்ளது. கடந்த 14 முதல் 18 ஆம் திகதி வரை நடத்தப்பட்ட அணுசக்தி தொடர்பான மறுஆய்வுப் பணியைத் தொடர்ந்து சர்வதேச அணுசக்தி முகவரகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
அரசாங்கத்தால் கோரப்பட்ட ஒருங்கிணைந்த அணுசக்தி உள்கட்டமைப்பு மறுஆய்வு பணி, 2022ஆம் ஆண்டு மதிப்பாய்விலிருந்து முன்னேற்றத்தை மதிப்பிட்டது.
முன்மொழியப்பட்ட அணுசக்தி சட்டம், உலை கொள்முதல் அமைப்பு மற்றும் 2044 ஆம் ஆண்டு வரை தேசிய எரிசக்தி திட்டத்தில் அணுசக்தியைச் சேர்ப்பது உள்ளிட்ட இலங்கையின் முன்னேற்றங்களை சர்வதேச அணுசக்தி முகவரகம் பாராட்டியது.
2010 ஆம் ஆண்டில் அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட இலங்கையின் அணுசக்தி திட்டம், வலுசக்தி அமைச்சு, அணுசக்தி சபை, இலங்கை மின்சார சபை மற்றும் அணுசக்தி சக்தி ஒழுங்குபடுத்தல் சபை உள்ளிட்ட பல நிறுவன அமைப்பால் வழிநடத்தப்படுகிறது.
வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி சர்வதேச அணுசக்தி முகவரகத்தின் பணியை பாதுகாப்பான, நிலையான வலுசக்தி எதிர்காலத்தை நோக்கிய “குறிப்பிடத்தக்க மைல்கல்” என குறிப்பிட்டுள்ளார்
000
Related posts:
|
|
|


