இலங்கை – அவுஸ்திரேலியா டெஸ்ட் தொடர் இன்று ஆரம்பம்!

Wednesday, January 29th, 2025

அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸட் தொடரின் முதல் போட்டியானது இன்று (29) காலை 10.00 மணிக்கு காலி, சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

பேட் கம்மின்ஸ் இல்லாத நிலையில் அணியை ஸ்டீவ் ஸ்மித் வழிநடத்துவார். இந்தியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் டிராபியை 3-1 என்ற கணக்கில் வென்றதன் மூலம், அவுஸ்திரேலியா ஏற்கனவே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டியில் இடம்பிடித்துவிட்டது.

மேலும், ஜூன் 11-16 முதல் லோர்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் தென்னாப்பிரிக்காவை டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டியில் எதிர்கொள்கிறது.

முன்பதாக இலங்கை 2023-2025 WTC சுழற்சியில் விளையாடிய 11 போட்டிகளில் 06 தோல்வியடைந்துள்ளது.

எனவே, அவர்களுக்கு WTC இறுதிப் போட்டிக்கு நுழைவதற்கான வாய்ப்புகள் கைவிட்டு போன நிலையில், இன்று ஆரம்பமாகும் டெஸட் தொடருக்கான அணியை தனஞ்சய டிசில்வா வழி நடத்துவார்.

இதுவரை இரு அணிகளுக்கு இடையிலும் நடைபெற்ற 33 டெஸ்ட் போட்டிகளில் அவுஸ்திரேலியா 20 வெற்றிகளை பெற்றுள்ளது.

அதேநேரம், இலங்கை 05 வெற்றிகளை பெற்றுள்ளதுடன், 08 போட்டிகள் சமனிலையில் முடிவடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

போட்டி நாளில் காலிக்கான வானிலை முன்னறிவிப்பு மழைக்கான வாய்ப்புகளுடன் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.

இதனால், ஆடுகளம் ஈரப்பதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஆட்டத்தின் ஆரம்ப மணிநேரத்தில் பந்துவீச்சாளர்களுக்கு சில உதவிகளை வழங்கும்

Related posts: