இலங்கையை கைவிட்டதா அமெரிக்கா – பாரிய நெருக்கடியில் அநுர அரசு!
Wednesday, July 9th, 2025
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்த வரி விகிதங்களுக்கு அமைய இலங்கை மீது 44 சதவீத வரி விதிக்கப்பட்டது.
அந்த வரி விகிதத்தை குறைப்பது தொடர்பாக இலங்கை அரசாங்கம், அமெரிக்க அதிகாரிகளுடன் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளது. என்னும் வெள்ளை மாளிகையால் நேற்று வெளியிடப்பட்ட 14 நாடுகளின் பட்டியலில் இலங்கை உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை
எனினும் இலங்கை மீது அமெரிக்கா வரிகளை குறைக்கும் என எதிர்பார்ப்பதாக பொருளாதார மேம்பாட்டு பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
“எங்கள் பேச்சுவார்த்தை இறுதி மட்டத்தை எட்டியுள்ளது. எங்களுக்கு சாதகமாக பதில் கிடைத்துள்ளது. டிரம்ப் கூறிய 14 நாடுகள் பட்டியலில் இலங்கை உள்ளடக்கப்பட்டிருக்கும் என எங்களுக்கு நம்பிக்கை உள்ளது.
இலங்கை மீதான வரிகள் குறைக்கப்படும் என அரசாங்கம் நம்பிக்கையில் உள்ளது. எனினும் அமெரிக்கா தரப்பில் முக்கிய தகவல்கள் வெளியிடவில்லை.
அவ்வாறு இரகசியமாக பேணுவது, இராஜாதந்திர நடவடிக்கையாகும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
எனினும் வெள்ளை மாளிகையால் நேற்று வெளியிடப்பட்ட 14 நாடுகளின் பட்டியலில் இலங்கை உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.
அமெரிக்காவின் வரிச்சலுகையை இலங்கை பெற்றுக்கொள்ளத் தவறினால், பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்படும் என ஏற்கனவே துறைசார் நிபுணர்கள் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|
|


