இந்தியன் ப்ரீமியர் லீக் – முதல் அணியாக வெளியேறியது சென்னை சூப்பர் கிங்ஸ்!
Thursday, May 1st, 2025
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 4 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணி களத்தடுப்பை தேர்வு செய்தது.
இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 190 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சார்பில் சாம் கரன் அதிகபட்சமாக 88 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இந்தநிலையில், 191 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 19.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 194 ஓட்டங்களைப் பெற்று வெற்றிபெற்றது.
பஞ்சாப் கிங்ஸ் அணியின் சார்பில் ஸ்ரேயாஸ் ஐயர் அதிகபட்சமாக 72 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். போட்டியின் ஆட்டநாயகனாக ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவு செய்யப்பட்டார்.
இதற்கமைய 2025 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடரிலிருந்து முதலாவது அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


