இத்தாலியின் வெளிவிவகார மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு பிரதி அமைச்சர் இலங்கை வருகை!

Tuesday, September 2nd, 2025


……
இத்தாலியின் வெளிவிவகார மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு பிரதி அமைச்சர் மரியா ட்ரிபோடி நாளை(03) இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்ய உள்ளார்.

இலங்கை வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரியா எதிர்வரும் 5ஆம் திகதி வரையில் நாட்டில் தங்கியிருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் பத்து ஆண்டுகளுக்குப் பின்னர், இத்தாலியிலிருந்து இலங்கைக்கு சிரேஸ்ட பிரதிநிதியொருவர் விஜயம் செய்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அடுத்துவரும் வாரங்களில் குறைக்கப்படுவதற்கான சாத்தியங்கள் - அமைச்சர் ...
நலன்புரி கொடுப்பனவை வழங்க தகுதியானவர்களை அடையாளம் காணும் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் எதிர்வர...
வடக்கில் இன்றுமுதல் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்!