இத்தாலியின் வெளிவிவகார மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு பிரதி அமைச்சர் இலங்கை வருகை!

……
இத்தாலியின் வெளிவிவகார மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு பிரதி அமைச்சர் மரியா ட்ரிபோடி நாளை(03) இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்ய உள்ளார்.
இலங்கை வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரியா எதிர்வரும் 5ஆம் திகதி வரையில் நாட்டில் தங்கியிருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் பத்து ஆண்டுகளுக்குப் பின்னர், இத்தாலியிலிருந்து இலங்கைக்கு சிரேஸ்ட பிரதிநிதியொருவர் விஜயம் செய்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
இலங்கையில் மேலும் இரு உயிரிழப்புகள் பதிவு!
தாக்குதலின் தீவிரத்தை குறைத்த ரஷியா - எச்சரிக்கை ஒலி நிறுத்தம் என உக்ரைன் ராணுவம் தகவல்!
2023ஆம் ஆண்டில் 99 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனம் - பத்திரிகையாளர் பாதுகாப்பதற்கான குழு தெரிவி...
|
|