இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் வைபவ்!

Friday, May 23rd, 2025

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் பதினான்கு வயதுடைய துடுப்பாட்டவீரர் வைபவ் சூர்யவன்ஷி இடம் பெற்றுள்ளார்.

ஏப்ரல் மாதத்தில், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணியை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியபோது, ​​ஆண்கள் டி20 போட்டியில் சதம் அடித்த இளைய வீரர் என்ற பெருமையைப் வைபவ் பெற்றுக்கொண்டார்.

இந்த போட்டியில் அவர் 38 பந்துகளில் 101 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். சூர்யவன்ஷி, முன்னதாக அஸ்திரேலியாவுக்கு எதிரான இளைஞர் டெஸ்ட் போட்டியில் 58 பந்துகளில் சதம் அடித்து சாதனைப்படைத்திருந்தார்.

ஜூன் 27 ஆம் திகதி ஹோவில் ஆரம்பமாகும் இந்தத் தொடரில், ஐந்து ஒருநாள் போட்டிகளும், பெக்கன்ஹாம் மற்றும் செல்ம்ஸ்ஃபோர்டில் முறையே இரண்டு multi-day போட்டிகளும் நடைபெறவுள்ளன.

இதன்படி இந்திய அணியில்: ஆயுஷ் மத்ரே (c), வைபவ் சூர்யவன்ஷி, விஹான் மல்ஹோத்ரா, மௌல்யராஜ்சிங் சாவ்தா, ராகுல் குமார், அபிக்யான், ஹர்வன்ஷ் பங்கலியா, ஆர்.எஸ். அம்ப்ரிஷ், கனிஷ்க் சவுகான், கிலன் படேல், ஹெனில் படேல், யுதாஜித் ஈன ராகாவ், பிரணவ் ராகாவ், பிரணவ் ராகாவ், பிரணவ் ராகாவ். அன்மோல்ஜீத் சிங் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்

000

Related posts: