அம்பாறையில் ஈ.பி.டி.பியின் அலுவலகத்தை திந்துவைத்தார் செயலாளர் நாயகம் டக்ளஸ்!

Wednesday, October 23rd, 2024

மூவின மக்களும் வாழும் அம்பாறை மாவட்டத்தில் கடந்த காலத்தில் அனைவரும் சமத்துவம் என்ற வகையிலேயே ஈபிடிபி அதனது அரசியல் பணிகளை ஆற்றியுள்ளதக சுட்டிக்காட்டிய செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சில விரும்பத்தகாதவர்களின் செயற்பாடுகளல் தடைப்பட்டிருந்த எமது கட்சிப் பணிகள் மீண்டும் உத்வேகத்தோடு முன்னெடுக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்டத்திற்கான ஈழ மக்கள் ஜனநயக கட்சியின் அலுவலகத்தை சம்பிழரதாய பூர்வமாக திறந்து வைத்து உரையாற்றும் போதே இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில் –

தேசிய நல்லிணக்கமே எமது கட்சியின் நிலைப்பாடு. வேற்றுமைகளையும் பாகுபாடுகளையும் நாம் என்றும் ஏற்றிருந்ததில்லை. அதனடிப்படையில் இம்மாவட்டம் பல்லின மக்களை கொண்டதாக இருப்பதனால் எல்லோர் நலன்களையும் கருத்தில் எடுத்து ஒரு சமூகம்,  அல்லது ஓர் மதம் சார்ந்தவர்களை ஒடுக்காத வகையில் அனைவருக்கும் சமத்துவம் என்ற வகையிலேயே ஈபிடிபி கட்சியின் செயற்பாடுகள் அமையும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார் .

000

Related posts: