அமரர் நவரத்தினம் உமாதேவி அவர்களின்பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி!

Friday, August 8th, 2025


…….
அமரர் நவரத்தினம் உமாதேவி அவர்களது பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா தனது இறுதி அஞ்சலி மரியாதை செலுத்தினார்.

சுகயீனம் காரணமாக அமரத்துவமான அன்னாரது பூதவுடல் கிராஞ்சியல் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில் அன்னாரது பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் மலர்மாலை அணிவித்து தனது இறுதி அஞ்சலியை செலுத்தியதுடன் அன்னாரது மறைவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் கட்சி ஆதரவாளர்களுக்கும் தமது ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்தார்.

இதன்போது, வடக்கு மகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினருமான வை. தவநாதன் கட்சியின் பூநகரி பிரதேச ஒருங்கிணைப்பாளருமான தோழர் ராசலிங்கம் மற்றும் பூநகரி பிரதேச சபை உறுப்பினருமான திவாகரன் உள்ளிட்ட பலரும் தமது அஞ்சலி மரியாதையை செலுத்தியிருந்தனர்.

அமரர் நவரத்தினம் உமாதேவி கிராஞ்சி ஶ்ரீ முருகன் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் முன்னாள் தலைவரும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் நீண்டகால செயற்பாட்டாளருமான தோழர் நவரத்தினம் ( வண்ணக்கிளி) அவர்களது துணைவியார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts:


கடந்த காலத்தில்  தேசியவாதத்தை பேசியவர்களால் தாம் ஏமாற்றமடைந்ததை மக்கள் உணர்ந்துகொண்டுள்ளனர் - டக்ளஸ்...
தேசிய நல்லிணக்கம் என்பது எமது மக்கள் மத்தியில் சாத்தியமற்ற விடயமாகவே இருக்கிறது -  நாடாளு மன்றில் டக...
அநுர ஜனாதிபதிக்கு அறிவின் மையம் தொடர்பாக ஈ.பி.டி.பியின் செயலளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கடிதம்!